போர்க் குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணை தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கம் அளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில் இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரசாங்கத்தின் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவல உள்ளிட்ட குழுவினர் இம்மாத இறுதியில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஸ்ரீலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைனினால் சமர்பிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை தொடர்பாக தான் மேற்கொண்ட மதிப்பீடு மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
உள்ளக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றலை அனுமதிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவருகின்ற நிலையில் இதுதொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றவிருக்கும் உரையில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இந்தக் கூட்டத்தொடரிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிரும் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment