June 27, 2016

சித்திரவதைகளை தடுப்பதற்கு எவ்வித சட்டமும் இல்லை ; ரைட் டு லைப்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிலான தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் சித்திரவதைகளுக்கு உள்ளாகுபவர்களை பாதுகாப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என “ரைட் டு லைப்“ என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றில் பல்வேறு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடும் அந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர் பிலிப் திஸாநாயக்க எனினும் சித்திரவதைகளை தடுப்பதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லையென  கவலை வெளியிட்டார்.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு தோள்கொடுக்க ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பில் செயலமர்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரைவதைக்கு உள்ளாகுபவர்களுக்கு உதவுவது  தொடர்பிலான தினத்தை முன்னிட்டே இந்த அமர்வு இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

“ரைட் டூ லைப்“ மனித உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

No comments:

Post a Comment