April 10, 2015

நாமல் களியாட்ட திட்டங்களுக்காக 86 மில்லியன் செலவு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் 2009ம் ஆண்டு முதல் திரும்ப பெறுவது குறித்து எவ்வித கவனத்தை செலுத்தாது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் களியாட்ட திட்டங்களுக்காக 89 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோர் எந்த வெளிப்படை தன்மையும் இல்லாமல் நாமல் ராஜபக்சவின் இரவு நேர கார் ஓட்ட பந்தயம் மற்றும் கார்ல்டன் றக்பி 7 ஆகியவற்றுக்கு நிறுவனத்தின் அனுசரணையை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் நிறுவனம் இவற்றுக்காக 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு 74,137,307 ரூபாவை செலவிட்டுள்ளது. கார்ல்டன் றக்பி 7 போட்டிகளுக்கு நாமல் ராஜபக்ச தலைமையில் இயங்கிய
இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்து வந்தது. அதேவேளை, 2012ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை இரவு நேர கார் ஓட்டப் பந்தயத்திற்காக இலவச சரக்கு சேவை மற்றும் இலவச பயணச்சீட்டுக்களையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
இவற்றுக்கான செலவுகளை நிறுவனம் விளம்பரங்களை செய்வதன் மூலம் ஈடு
செய்து கொண்டதா இல்லையா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எவ்வாறாயினும் நிறுவனம்
செலவழித்த பணத்தில் இரண்டு மில்லியன் ரூபா மாத்திரம் திரும்ப கிடைத்துள்ளது. இதனை தவிர உணவு மற்றும் பானங்களுக்காகவும் ஸ்ரீலங்கன்
எயார்லைன்ஸ் நிறுவனமே செலவுகளை செய்துள்ளது.
நாமல்ராஜபக்சவின் களியாட்ட திட்டங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 12,380,361 ரூபாவை செலவிட்டுள்ளது.
மொத்தமாக 86,517,669 ரூபாவை நாமலுக்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் செலவிட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.


அதேவேளை ராஜபக்சவினர் நெருங்கிய உறவினர்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு விளம்பரம் மற்றும் ஏனைய ஒப்பந்தங்களை வழங்கியதில் கடந்த அரசாங்கத்தில் பாரிய மோசடிகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.Namil

No comments:

Post a Comment