June 9, 2016

ஆயுதக்கிடங்கு குண்டு வெடிப்புத் தொடர்பில் வெளிவராத தகவல்கள்!

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ பரவல் தொடர்பாக மறைக்கப்படும் விடயம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து,

“இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளதால் விடுமுறையில் சென்ற இராணுவ வீரர்கள் அதிகம்.

வேறு வேலைக்காக அங்கிருந்த மற்றைய வீரர்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

யாராவது ஒருவர் இதனை செய்திருந்தால், செய்த நபர் உயிர் ஆபத்துகளை குறைப்பதற்காக கவனம் செலுத்தியுள்ளார்.

மேலும் ஒரு தகவல் உள்ளது, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்ட அதிகாரியொருவர் இந்த முகாமினுள் அன்றைய தினத்தினுள் நுழைந்துள்ளதாக.

எனினும் இந்த அனைத்து விடயங்களையும் ஒன்றிணைத்து பார்த்தால் நியாயமான சந்தேகம் ஏற்படுகின்றது.

இது இயற்கையாக நடைபெறாத ஒன்றாயின் ஏதாவது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் விளைவாகும்.

இது பொதுவாக சிகரட் ஒன்றை புகைத்ததால் ஏற்பட்ட தீ என கருத முடியாது.

நிலத்தடியில் உள்ள ஆயுத கிடங்கில் எளிதாக இவ்வாறு தீ பரவ முடியாது.

மேலும் இது வெப்பம் அதிகமானதால் இது ஏற்பட்டது என கூறமுடியாது.

ஏன் என்றால் இது மழைக் காலம்.

இது இடம்பெற வேண்டுமானால் அதிக வாய்ப்பாகவுள்ளது எதிரிகளின் கையில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் வெடிப்பதற்கான பொத்தானை அழுத்தியிருக்க வேண்டும்.

இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக இறுதி முடிவுக்கு வரமுடியாது.

எனினும் மறைக்கப்படும் விடயம் இருப்பதாக தெரிகிறது, இராணுவ புலனாய்வு பிரிவை இது தொடர்பாக விசாரணையில் இருந்து அகற்றியமையில்.

இதனை அடிப்படையாக கொண்டு வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியும்.

எனினும் நாம் அரசாங்கத்திடம் வேண்டுவது, மறைக்க ஒன்றும் இல்லையாயின் இராணுவ புலனாய்வு பிரிவை இந்த விசாரணையில் கலந்து கொள்ள வாயப்பளிக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment