சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு தீப்பரவலுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவே பொறுப்பேற்கவேண்டும் என்ற குற்றச்சாட்டை சந்திரிக்கா நிராகரித்துள்ளார்.
சாலாவ முகாமில் பாரிய ஆயுதங்களை களஞ்சிப்படுத்துமாறு 1990ம் ஆண்டு சந்திரிக்காவே உத்தரவிட்டதாக இராணுவ உயரதிகாரியை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இதனை மறுத்துள்ள சந்திரிக்கா இது முற்றிலும் பொய்யான தகவல் என்று குறிப்பிட்டுள்ளார்.
1993ம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வரும் முன்னரே சாலாவ முகாமில் ஆயுதக்கிடங்கு அமைக்கப்பட்டிருந்தது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது 1990ம் ஆண்டு சாலாவ முகாமில் பாரிய ஆயுதக்கிடங்கு அமைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment