ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு சமூகவலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஜெனிவா அமர்வில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரில் இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர் சொய் கியோங் லிம், தனது ஆரம்ப உரையில் இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டதோடு, ரஷ்ய மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு சமூகவலைத்தளங்கள் (ட்விட்டர்) ஊடாக அந்நாட்டு அரச அதிகாரிகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த அமர்வில் பங்கேற்ற ரஷ்ய இராஜதந்திரிகள் சொய் கியோங் லிம்மின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து உரையாற்றிய மனித உரிமைகள் பேரவையின் தலைவர், ஸ்ரீலங்கா, சீனா, பஹ்ரைன் உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு சமூகவலைத்தளங்கள் ஊடாக அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் அவ்வாறான துன்புறுத்தல்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment