June 4, 2016

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை! படை அதிகாரிகள் கலக்கத்தில்..!

யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பவுள்ள
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை குறித்து உயர் இராணுவ அதிகாரிகளை அழைத்து அரசாங்கம் தெளிவுபடுத்தவுள்ளது.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பன தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளிக்கவுள்ளார்.

வன்னிப் போரில் பங்கேற்ற முக்கிய மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக் கொண்டுள்ளனர்.

அவர்களுக்கும் இது குறித்த விளக்கம் அளிக்கப்படவுள்ளது. எனினும் எப்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது பற்றிய விளக்கத்தை அளிப்பார் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

பிதமர் ரணில் விக்ரமசிங்க தென் கொரியாவிற்கு விஜயம் செய்ய முன்னர் படை அதிகாரிகளை சந்தித்த போதும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை, வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு போன்ற விடயங்கள் குறித்து பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன.

இந்த சந்திப்பின் போது படை அதிகாரிகளுக்கு தனித் தனியாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்படுமா என இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் போது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை குறித்து படையினருக்கு தெளிவுபடுத்தப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் இதனை மேற்கொள்வார் எனவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment