June 4, 2016

வவுனியாவில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பத்தினார் மகிழங்குளத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டினை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனார்.

இவ் தாக்குதலில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment