விடுதலைப் புலிகள் மீதே தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் புதிதாய் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள
இலங்கை அரசு தவறியுள்ளதாக அமெரிக்க உள்விவகாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை அரசின் கவனம் மொத்தமும் விடுதலைப் புலிகளின் சாத்தியமான மறு எழுச்சி குறித்தே இருப்பதால், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளில் இலங்கை குடிமக்கள் இணைவது போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தவறியுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் சிரியா கடலோரப் பகுதியில் வைத்து பலியான பயங்கரவாதி இலங்கை நாட்டவராக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், சிரியாவில் பயங்கரவாதிகளுக்காக போராடியுள்ள அந்த நபரின் உறவினர் ஒருவரும் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணசேன ஹெட்டியாராச்சி, இலங்கை நாட்டவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக செய்திகள் வரலாம், ஆனால் அந்த அமைப்பு இலங்கையில் செயல்பட்டு வருவதற்கான எந்த உறுதியான முகாந்திரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உள்விவகாரத்துறையின் குறித்த அறிக்கையில், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பகுதிகளில் அதிகமான இராணுவத்தை குவித்து வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பிணையில் வெளிவந்துள்ள முன்னாள் போராளிகளை பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் மீண்டும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் கைது செய்து வருவதையும் கண்டித்துள்ளது.

No comments:
Post a Comment