மாங்குளம் ஒலுமடுப்பகுதியில் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மதகுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் செல்லையா தங்கவேல் , வயது 48என்னும் புலுமச்சி நாதகுளத்தினைச் சேர்ந்தவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
அம்பகாம்ம் புலிமச்சிநாதகுளம் பகுதியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளையில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து அருகில் உள்ள மதகுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மாங்குளம் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நோயாளர் காவுவன்டி உரியவரை மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
இவ்வாறு எடுத்துச் சென்றவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்திய அதிகாரி விபத்துக்குள்ளானவரின் உயிர் பிரிந்திருந்தமையை உறுதி செய்தார்.
உயிரிழந்தவரின் உடலம் தற்போது மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் ஸ்ரீ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment