வவுனியாவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் அரசியல்வாதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா, கொக்குவெளியில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் ஆக்கிரமிக்கப் பட்டு வருவதுடன் குளப்பகுதியும் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இதேவேளை அரசியல்வாதியொருவரினால் கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்ட போதிலும் இதுவரை வந்து பார்வையிடவில்லை. கொக்குவெளி என்பது சிங்களத்தில் கொக்கெலிய என்று பெயர் மாற்றப்பட்டு வருகின்றது. தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் ஆக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
அத்துடன் தச்சனாங்குளத்தில் தமிழ் மக்களின் காணிகள் தற்போது ஆக்கிரமிக்கப்படுகின்றது. கட்டிடம் ஒன்று கட்டப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. அவை தொடர்பிலும் வன்னி மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிந்தும் வாய் மூடி உள்ளனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு மைதானம் அமைப்பதற்காக கோரப்பட்ட காணி மற்றும் இறம்பைக்குளம் மயானம் என்பன தற்போதும் வான்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மத கிரியைகளை கூட சுதந்திரமாக செய்ய முடியாத வகையில் உள்ளது. வான்படையினரிடம் அனுமதி பெற்றே சடலங்களை கூட எரிக்கவும் தாக்கவும் வேண்டியுள்ளது. இப்பகுதி முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
எனவே இவை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காப்பது ஏன் என்பது எமக்கு தெளிவில்லாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment