June 7, 2016

காலியில் நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய இளைஞர் கொலை!

காலி - போத்தல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கொன்றில் ஆஜராகி மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் போத்தல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

அத்துடன் கொலை செய்யப்பட்ட இளைஞன் இராணுவத்தில் கடமையாற்றியவர் எனவும் கூறப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை போத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment