வெடிப்புக்குள்ளான கொஸ்கம, சலாவ ஆயுதக் களஞ்சியசாலையை குறித்த இடத்தில் நிர்மாணிப்பதற்கு தீர்மானித்தது
அப்போதைய அரசின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவர் இதனை நிர்மாணித்தது இராணுவ அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
இதற்கு கொஸ்கம பிரதேசவாசிகளும் எதிர்ப்பை வெளியிட்டார்கள், ஆனால் அதையும் சந்திரிக்கா பொருட்படுத்தவில்லை என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த முகாம் தொடர்பில் அவதானம் எடுத்த மஹிந்த இதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை அதிகாரிகளுக்கு வழங்கியதாகவும், இது தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சில திட்டங்களை வகுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இங்குள்ள ஆயுதங்கள் வியாங்கொட, ரம்பேவ, ஒயாமடுவ முகாம்களுக்கு கொண்டு செல்ல தீர்மானித்திருத்த போதிலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதைப்பற்றி கவனத்தில் எடுக்கவில்லை என்றும் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் பல இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறான விபத்துக்கள் இனியும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தையே சாருவதாக நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment