மன்னார் மறை மாவட்டத்திற்கான ஆயர் நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மன்னார் ஆயராக இருந்த இராயப்பு யோசேப்பு ஆண்டகை உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து மன்னாரின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக ஓய்வு நிலை ஆயரான யோசப் கிங்சிலி, கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மன்னாரின் புதிய ஆயர் எதிர்வரும் ஆவணி மாதம் பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறானதொரு நிலையில் ஆயர் நியமனத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஆயரின் தெரிவிற்காக சிலரது பெயர் பட்டியல் வத்திக்கானிலுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேலும் சிலரது பெயர் பட்டியல் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாகவே தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மன்னாரிற்கான புதிய ஆயர் எதிர்வரும் ஒரு சில மாதங்களில் பதவியேற்பார் என நம்பப்படுகின்றது.

No comments:
Post a Comment