முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இராணுவ உயரதிகாரிகள் போரிடுவதை ஒருபக்கம் வைத்துவிட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுடன் இரகசிய சந்திப்புக்களை நடத்தியிருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அப்போது அறிந்துகொண்ட மஹிந்த ராஜபக்ச உடனடியாக இராணுவ உயரதிகாரிகளுக்கு இவ்வாறான சந்திப்புக்களை நிறுத்துமாறு பணித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த அரசியல்வாதிகள் இருப்பதாகவும் இராணுவத்தினர் போரிடுவதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை மஹிந்த ராஜபக்ச வழங்கியிருந்ததாகவும் கோட்டாபய இதன்போது குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment