June 21, 2016

2015ஆம் ஆண்டு 65 மில்லியன் அகதிகள் வெளியேற்றம்! ஐ.நா சபை தகவல்!

2015ஆம் ஆண்டு மாத்திரம் 65.3 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயரந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


இது 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 5.8 மில்லியன் அதிகம் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

சர்வதேச அகதிகள் தினத்தினை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகின் மொத்த சனத்தொகையில் 113 பேருக்கு ஒருவர் உள்நாட்டிலேலா அல்லது வெளிநாட்டிலோ ஏதேனும் ஒரு வகையில் அகதியாக இடம்பெயர்கின்றனர்.

இதனிபடி பாலஸ்தீனத்தில் அதிகபட்சமாக 5 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ள அதேவேளை, சிரியாவில் 4.9 மில்லியன் மக்களும், ஆப்கானிஸ்தானில் 2.7 மில்லியன் மக்களும் அதகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறை, பொருளாதாரம், வறுமை, உள்நாட்டு யுத்தம் மற்றும் ஸ்தீரமற்ற அரசியல் போன்ற காரணிகளினால் இவ்வாறு மக்கள் அகதிகளாக வெளியேறுவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment