யாழ்.குடாநாட்டுக்கு ஒரு நாள் விஜயமாக எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை வருகை தரும் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசே னா புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்.துரையப்பாவிளையாட்டரங்கை திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன், யாழ்.மாவட்டத்தின் விளையாட்டுத்துறைஅபிவிருத்தி தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.
18ம் திகதி காலை 10 மணிக்கு யாழ்.வரும் ஜனாதிபதி முதல் நிகழ்வாக யாழ்.துரையப்பாவிளையாட்டரங்கை திறந்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து யாழ்.மாவட்டத்தின்விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும்கூட்டத்தில் கலந்து கொள்வார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்புவலயத்திற்குட்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான ஒரு தொகுதி நிலத்தை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களின் படியாழ்.துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு விழா மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுதொடர்பான விசேட கூட்டம் ஆகியன தொடர்பாக நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டிருக்கும் போதும்வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் நிலம் விடுவிப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமானதகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
எனவும் வலி,வடக்கு உயர்பாதுகாப்புவலயத்திற்குட்பட்டிருக்கும் 206 ஏக்கர் நிலம் ஜனாதிபதியின் வருகையுடன் மக்களுடையமீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment