இலங்கையில் நீதி, நல்லிணக்கம் மற்றும் சுயநிர்ணயம் அமைவதற்கும் பிரித்தானியா உறுதுணையாக இருக்கும் என தொழிலாளர் கட்சி சார்பாக அதன் தலைவர் Jeremy Corbyn தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வினை முன்னிட்டு அவர் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்த நாளை நினைவு கோரும் தினத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
பாதிப்புக்குள்ளான தமிழ் சமூகத்திற்கு நீதி கிடைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொழிலாளர் கட்சி முன்னின்று செய்யும். மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் அமைப்பு கொணர்ந்துள்ள தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தவும் தொழிலாளர் கட்சி உறுதுணையாக இருக்கும்.
பிரித்தானியாவில் குடியிருக்கும் தமிழ் சமூகம் அளப்பரிய பங்காற்றியுள்ளது. உண்மையை நோக்கியுள்ள உங்கள் முயற்சிகளுக்கும், நீதி, நல்லிணக்கம் மற்றும் சுயநிர்ணயம் இலங்கையில் அமைவதற்கும் பிரித்தானியா உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment