April 17, 2015

கைதடி வடக்கிலிருந்து நீர்வேலி செல்லும் பாதையில் தற்காலிக பாலம் இரும்புக்காக உடைப்பு( படங்கள் இணைப்பு)

கைதடி வடக்கிலிருந்து நீர்வேலி செல்லும் பாதையில் பொது மக்களால் மின்சார தூண்களைப் பாவித்து அமைக்கப்பட்ட பால அமைப்பை பழைய இரும்பு விற்பதற்காக விசமிகள் சிலர் உடைத்து வருகின்றனர்.


2008 ஆம் ஆண்டில் இப் பாதையில் சிமெந்தால் 3 பாரிய தூண்களைக்கட்டி பழைய மின்சார தூண்கள் 6 அடுக்கி பால அமைப்பை ஏற்படுத்தினார்கள். கைதடி, நீர்வேலி பிரதேச மக்கள் இணைந்து இந்தப் பாதையை அமைத்தார்கள்.

அதன் மூலம் இந்தப்பிரதேசத்தில் நீரோட்டம் உள்ள காலங்களில் இப் பாலத்தால் கடந்து செல்ல முடிகிறது. அண்மைய 2 வருடங்களாகவே இந்த மின்சார தூண்களை விசமிகள் பழைய இரும்புக்காக உடைத்து தற்போது 2 தூண்களுடன் மட்டுமே இந்தப் பாலம் உள்ளது.

இதனைத் தடுத்து நிறுத்தி இந்தப் பாதையில் பாலம் ஒன்றை நிரந்தரமாகக் கட்டித் தர வேண்டுமென இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment