தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனுக்குமிடையிலான சந்திப்பொண்று இன்று காலை யாழ் அரச செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தற்போது
அரசாங்கத்தால் விலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 1100 ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் நான்கு பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களால் அரச அதிபருக்கு குட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் குறித்த இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் அந்தப்பகுதியில் இருக்குமானால் அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியேற முடியாது போன்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதே வேளை தற்போது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு தேவையான குடிநீர்,போக்குவரத்து,மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் அத்துடன் சங்கரத்தைப் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக அந்தப்பகுதியில் தற்காலிக குடிநீர்த்தாங்கிகளை வைக்குமாறும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களால் அரச அதிபரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட அரச அதிபர் தாம் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தால் விலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 1100 ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் நான்கு பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களால் அரச அதிபருக்கு குட்டிக்காட்டப்பட்டது.
இதே வேளை தற்போது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு தேவையான குடிநீர்,போக்குவரத்து,மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் அத்துடன் சங்கரத்தைப் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக அந்தப்பகுதியில் தற்காலிக குடிநீர்த்தாங்கிகளை வைக்குமாறும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களால் அரச அதிபரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment