தமிழக மீனவர்கள் எல்லைக் கடந்து வந்தால் அவர்களை சுடுவதாக ரணில் விக்ரமசிங்க நகைச்சுவையாகவே கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.ரணில் விக்ரமசிங்கவும் இந்திய ஊடகம் ஒன்றிடமே இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
தமது வீட்டுக்குள் அத்துமீறி நுழைபவரை சுட்டுக் கொல்வதற்கு உரிமை இருப்பதாக ரணில் கூறி இருந்தார். ஊடகவியலாளர் தொடர்ச்சியாக கேட்ட கேள்விகளால் அலுப்படைந்த ரணில், இவ்வாறு பகிடி செய்த போதும், ஊடகங்கள் அதனை பெரிதுப்படுத்தி இருப்பதாக சந்திரிக்கா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment