யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி
2015 அடுத்த வருடம் ஐனவரி மாதம் 23-25 ஆம் திகதி வரை ஆறாவது முறையாகவும்
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக யாழ் வர்த்தக கைத்தொழில் துறை மன்றம்
அறிவித்துள்ளது.
இக் கண்காட்சியில் 250 இற்கும் மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளதுடன் உள்ளுர் மற்றும் சர்வதேச நாடுகளின் முயற்சியாளர்கள் பலரும் வருகை தரவுள்ளதாகவும் எமது முயற்சியாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமையும் என்றும் வர்த்தக கைத்தொழில் துறை மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் ஊடகவியியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக மாநாடு மேற்படி மன்றத்தின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது.
யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் துறை மன்றமானது இலங்கை கண்காட்சிகள் மற்றும் மாநாட்டு சேவைகள் தனியார் நிறுவனத்தினருடன் இணைந்து ஆறாவது தடவையாக யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளது.
வட மாகாணத்திலுள்ள அனைத்து தொழில் முயற்சியாளர்களும் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச வலையமைப்புடன் இணைப்பதனூடாக தமது உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான பரந்தளவிலான சந்தை வாய்ப்ப்பினைப் ஏற்படுத்திக் கொள்ள ஓர் இணைப்புப் பாலமாக அமைகின்றது.
மேலும் எமது முயற்சியாளர்கள் பொருத்தமான உள்ளீடுகள் இயந்திர சாதனங்களையும் அதன் பயன்பாட்டினையும் இணங்கண்டு தத்தமது தொழில் துறையில் பிரயோகிப்பதற்கும் நிலைத்து நிற்ககக் கூடியதான புதிய தொழில் துறைகளை இணங்கண்டு சிறந்த முறையில் முன்னெடுத்து வெற்றிகரமான ஓர் தொழில் முயற்சியாளர் எனும் நிலையினை எய்தவதற்கும் சிற்நத களமாக அமைகின்றது.
எமத மன்னறத்தினால் வருடா வருடம் இக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. அதே போன்று அடுத்த வருடமம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இம் முறை அதிகளவிலான காட்சிக் கூடங்களை அமைப்பதுடன் சர்வதேச முதலலீட்டாளர்களையும் அதிகளவில் வரவழைத்து எமது முயற்சியாளர்களுக்கு பல்வெறு வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.
குறிப்பாக சர்வதேச மற்றும் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் வருகை தரும் முயற்சியாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை உள்ளடக்கியதாக 250 இற்கும் மேற்பட்ட காட்சிக் கூடங்களை அமைக்க உள்ளதுடன் கடந்த காலங்களை விடவும் அதிகளவிலான பார்வையாளர்களும் வருவார்கள் எனவும் எதிர்பார்த்து அதற்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment