14.12.14 அன்று தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் நிகழ்வு மண்டபம் நிறைந்த
மக்களோடு மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.அகவை பேதமின்றி
கலந்து கொண்ட மக்கள் மண்ணின் விடுதலைக்காக அயராது உழைத்த தேசத்தின்குரலுக்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் நூல் வெளியீடும் இடம்பெற்றது.
இந்த உலகத்தில் ஏராளமான தத்துவஞானிகள் உலகை பலகோணங்களில் விமர்சனம் செய்திருக்கின்றார்கள் இந்த தத்துவஞானிகள் மேற்கத்தேய நாடுகளில் அதிகமாக வாழ்ந்திருக்கின்றார்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.
ஆனால் தமிழர்களின் தத்துவஞானியான தேசத்தின் குரல் பாலா அண்ணா மேற்கத்தேய நாட்டில் வாழ்ந்துவந்த போதும் தன் இனத்தின் விடுதலைக்காக எல்லாவற்றையும் துறந்து ஒரு போராளியாக தன்னை மாற்றி உலக தத்துவஞானிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக தமிழரின் இதயத்திலும் உலகமகான்களின் மனசாட்சியிலும் தேசத்தின் குரல் நிரந்தரமாக வாழ்ந்துகொணடிருக்கின்றார்.
உலகத்தை மாற்றி அமைக்கவும் அறிவியற் பரப்பை உயர்த்துவதர்க்கும் அரும்பாடுபட்டு வரும் தத்துவமேதைகள் அழகான நாற்கலியில் அமர்ந்துகொண்டு கருத்து சுதந்திரம் கொண்ட நாடுகளின் அரவணைப்பில் செல்லப்பிள்ளைகளாக இருந்து கொண்டு கருத்துக்களையும் எழுத்துக்களையும் பதிவுசெய்கின்றார்கள்.
ஆனால் பாலா அண்ணா அவர்கள் முற்றிலும் மாறுபட்ட சூழலில் இருந்துகொண்டு தமிழரின் தலைவிதியை சதிகளில் இருந்து விடுவித்து விடுதலைபெற்ற இனமாக வாழ்வதர்க்கு ஒயாது உழைத்தார்.
குறிப்பாக இரத்தமும் சதையும் வியர்வையும் புழுதியும் இடப்பெயர்வும் அகதிவாழ்வும் பசியும் நோயும் ஏமாற்றங்களும் துரோகங்களும் தீரமும் தியாகங்களும் நிறைந்த சூழலில் பாலா அண்ணாவின் பேச்சும் எழுத்தும் இருந்து வந்ததோடு மட்டுமல்லாமல் தலைவர் அவர்களின் நம்பிக்கையின் சிகரமாகவும் அரசியல்ஞானியாகவும் செயல்ப்பட்டுவந்துள்ளார்.
தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் எழுத்தானது வெறும் அரசியலோடு மட்டும் முடங்கிவிடாது சமூகவியல் உளவியல் பொருளியல் மெய்யியல் வரலாற்றியல் மானிடவியல் போன்ற அறிவியற் பரப்புகளையும் பதிவு செய்திருக்கின்றது இந்த அறிவியற் பரப்புக்கள் தலைவர் தளபதிகள் போராளிகளின் விடுதலைப்பணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்திருக்கின்றது.
ஏறத்தாள முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தமிழீழவிடுதலைக்கான போரில் சமாதான காலகட்டங்களில் சாணக்கினாக விளங்கிய இவர் தமிழீழப்போராட்டத்தை சமாதானம் என்ற போர்வையில் நசுக்க முனைந்த சூத்திரதாரிகளின் சூட்சுமவினாக்களையெல்லாம் சூட்சுமமாகவென்று தமிழீழத்தை பாதுகாத்து வந்துள்ளார்.
அந்த அற்புதமான அறிவியற் போர்த்தளத்தை இழந்தபோதுதான் தமிழீழீழ விடுதலைப்போராட்டத்தில் இட்டு நிரப்ப முடியாத வெளியொன்றை சந்திக்கநேர்ந்தது இவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத தமிழினம் கலங்கிப்போனது.
லண்டன் எக்ஸ்எல் மண்டபத்தில் இதயம் உடைந்து விழிசொரிய தேசத்தின்குரல் அன்ரன் பலா அண்ணாவின் வித்துடலுக்கான இறுதிவணக்கம் நடைபெற்று பல்வாயிரக்கணக்கான மக்களின் விழிநீர் பூக்களின் வணக்கத்தோடு தமிழீழ தாகத்தை தாங்கி நின்ற புலிவீரனின் பூதவுடல் தீயில் சங்கமாகியது.
எந்தக்கனவோடு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் உடலின் நோயை பொருட்படுத்தாது கடல் மேடு காடு என ஒயாது உழைத்தாரோ அதே கனவோடு நாமும் தொடர்ந்து பயணிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

No comments:
Post a Comment