இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி இரண்டாம் வட்டார பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில்
மனிதமுகத்தின் அமைப்பிலான அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது.
தோற்றத்தில் மனிதர்களின் முகத்தை போலவே உள்ள இந்த அதிசய மாங்காயில் மனிதமுகத்தில் உள்ளது போலவே கண்கள், மூக்கு, வாய் போன்றவையும் காணப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகள் இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் வெளியானபின்னர் சமூகவலைத்தளங்கள் மூலமாக இந்த தகவல் படுவேகமாக பரவி வருகிறது.
இதேபோல், நைஜீரியா நாட்டிலும் ஒரு மாங்காய் காய்த்திருப்பதாக கடந்தவாரத்தில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அங்குள்ள நசாராவா மாநிலத்தின் உக்யா டோட்டோ பகுதியில் காய்த்த இந்த மாங்காயை தீயஆவியின் வடிவம் என கருதி யாருமே சாப்பிட முன்வரவில்லை என்ற உபரி தகவலும் படத்துடன் வெளியாகி இருந்தது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment