May 19, 2016

மௌரிசியஸ் நாட்டிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிப்பு!

அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் தோழமை அமைப்புக்களான மௌரிசியஸ் தமிழக்கோயில்களின் கூட்டமைப்பு, மௌரிசியஸ் தமிழ் அமைப்பு என்பன இணைந்து முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின உச்ச அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளன.

மௌரிசியஸ் றோசில் பகுதியில் அமைந்துள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் முன்பாக நேற்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌரிசியஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் பல அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகளும் உரை நிகழ்த்தியிருந்தனர்.
தமிழினப் படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை அவசியம், ஐக்கிய நாடுகள் சபையில் தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்,
தமிழீழத் தேசியக்கொடி வெகுவிரைவில் ஐ.நாவில் பறக்கும். அந்த நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.
தமிழ் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்பவற்றிற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவாளர்களும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்தப்படவேண்டும்.
தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். என்பவற்றை வலியுறுத்தியதாக அனைவரின் உரைகளும் இடம்பெற்றிருந்தன.













No comments:

Post a Comment