கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வடமாகாண ஆளுநர் சந்தித்தார்.
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று சந்தித்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்திற்கு வருகை தந்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அங்கு தங்கியிருந்த மக்களின் நிலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
நீண்ட கால தீர்வு பற்றாக்குறைகளால் தொடர்ந்தும் இவ்வாறான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மக்கள் இதன்போது தெரிவித்தனர்.
வருகை தந்த ஆளுநர் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவர்களுக்குத் தேவையான வீடு மற்றும் ஏனைய தேவைகளையும் பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளதாகவும் இதன்போது ஆளுநர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment