May 19, 2016

பிரான்ஸ் செவ்ரோன் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பை நினைவுகூறும் 7ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் நினைவு தினம் இன்று பிரான்சில் அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு பிரான்சின், செவ்ரோன் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கல் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை ஆரம்பமாகின.
இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
செவ்ரோன் மாநகர முதல்வர் ஸ்ரேபன் கத்ரேன் உள்ளிட்ட பலரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியின் முன்பாகவும் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment