முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் தொடரும் மழையினால் இன்று காலை 16.05.2016 சிறிய குளமொன்று உடைப்பெடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஒட்டுசுட்டான் கட்டுக்குளம் என்ற சிறிய குளமே உடைப்பெடுத்துள்ளதாகவும் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பிரதேச செயலர் ஊடாக விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் ஆறு குளங்கள் வான் பாய்வதன் காரணமாக வெள்ளம் வீதிகளை குறுக்கறுத்துப் பாய்வதனால் போக்குவரத்துகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment