கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், முப்படைகளினதும் தளங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக,
சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த வாரம், நடந்த நிகழ்வு ஒன்றில், கடற்படை அதிகாரி ஒருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடுமையாகத் திட்டி அவமானப்படுத்தியதையடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளங்களுக்குள் நுழைவதற்கு, கிழக்கு முதலமைச்சர் அனுமதிக்கப்படமாட்டார்.
அத்துடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில், படை அதிகாரிகள் பங்கேற்பதில்லை என்றும், முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment