May 20, 2016

போரியல் வரலாற்றில் கடற்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள்!

உலகப் போரியல் வரலாற்றில் தமிழர்களின் போர் திறன்கள் பல்வேறுபட்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு உதவியுள்ளது
என்பதற்கு கடற்புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சான்றாக அமைந்துள்ளன.

இறுதி யுத்தத்திற்கு பின்னர் இராணுவத்தினரால் வியந்து பார்க்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ தளபாடங்களில் சில இன்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில் கடற்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள் எனக் கூறப்படும் சில கப்பல்கள் அங்கு சென்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக வரலாற்றில் வியந்து பார்க்க வைத்த கடற்புலிகளின் தொழில்நுட்பங்களை கையாண்டே இன்று இலங்கை அரசாங்கம் தன்னுடைய அதிவேக படகுகளை வடிவமைத்து சர்வதேசத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது என கூறப்படுகிறது.






No comments:

Post a Comment