May 21, 2016

காதல் வலையில் விழவைத்து பலரை ஏமாற்றிய இளம்பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் இளைஞர்களை காதலிப்பதாக ஏமாற்றி இலட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர்
சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம், நகைகளை கொள்ளையிட்டு தலைமறைவானார்.

 
இதன்காரணமாக குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேகநபரான தேனுகா ரவீந்திரன் (வயது 22) என்ற அந்தப் பெண் யாழ்.நகரப்பகுதியில் நேற்று முன்தினம் மற்றுமொரு இளைஞருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தி திருமணம் வரையில் சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகமடைந்த குறித்த பெண்ணை காதலித்த நபர் அப்பெண்ணிடம் ஊடகங்களில் அண்மையில் உங்கள் புகைப்படம் வந்ததாக குறிப்பிட்டார். அதற்கு அந்தப் பெண் ஊடகங்கள் தவறுதலாக தனது புகைப்படங்களை பிரசுரித்ததாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த அந்நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அப்பெண்ணை பலவந்தமாக அழைத்துச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குறித்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தான் கொள்ளையடித்த நகைகள் தொடர்பான சகல விடயங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.மேலும் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்ட குறித்த இளம் பெண் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியிருந்தனர். அத்துடன் இந்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment