உலகில் மிக உயரமான இடமான இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கை பெண்ணாக ஜெயன்தி குருஉதும்பல சாதனை படைத்துள்ளார்.
இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இமய மலை ஏறிய பெண்ணாக அவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
அத்துடன் ஜெயன்தி குருஉதும்பலவுடன் சேர்ந்து இமய மலை எறுவதற்கு சென்ற யோஹான் பீரிஸ் இறுதி கட்டம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இமயமலையை அண்மித்த இடத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்று இந்த சவால் நிறைந்த பயணத்தில் குதித்திருந்தனர்.
இமய மலை உலகில் மிகவும் உயரமான மலை என்பதுடன், கடல் மட்டத்தில் இருந்து 29,029 அடி உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment