நாடுமுழுவதும் இன்று ஆக்ரோசமான புயல்காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
குறிப்பாக இலங்கையைச் சுற்றிலும் உள்ள கடல்பிராந்தியத்தில் கடுமையான காற்றும், பாரிய அலைகளும் காணப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மத்திய, தென், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஓரளவுக்கு கடுமையான காற்று வீசக்கூடும்.
கொழும்பு தொடக்கம் மன்னார் வரையான மேற்குக்கரையோர கடல் பிராந்தியத்தில் மிகவும் ஆக்ரோசமான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசத்திலும் காற்றின் தாக்கம் பலமாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் காற்று மணித்தியாலமொன்றுக்கு அறுபது மைல் வேகத்தில் வீசக்கூடும்.
இன்றைய தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத்தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் வடமேற்குப் பிராந்தியத்தில் இன்றும் ஓரளவு கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment