பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த வீடுகளைவிட்டு வெளியேற விரும்பாத நிலையில் அவர்களுக்கான உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கி எம்முடைய நிவாரணச் சேவை குழுவுடன் இணைந்து செயற்படுமாறு மக்கள் விடுதலை முன்னணியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவலை, வெலிவிட்ட மற்றும் அம்பத்தலே ஆகிய பகுதிகளுக்கு படகு மூலம் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும், சுகாதார வசதிகள் என்பன வழங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மற்றும் தேவையுள்ள மக்களை தேடிச் சென்று நாம் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றோம்.
எம்மாலான விதத்தில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொதுமக்களின் உதவிகளையும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். சேகரிக்கப்படும் இந்த நிவாரணப் பொருட்கள் எவ்வித கையாடல்களும் இன்றி பாதிக்கப்பட்ட மக்களை சென்றடை நாம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், நிவாரணப் பொருட்களை நம்பிக்கையுடன் எமது நிவாரணக் குழுவினரிடம் ஒப்படைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment