May 24, 2016

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் தனியாக பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை!

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளது.
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்பிரமணியம்.அசுபதி என்ற வயோதிபப் பெண்ணே இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு உணவை உண்ட பின் கைகழுவச் சென்ற வேளை பின்னால் வந்த இனந்தெரியாத நபரினால் இவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள், வெளிநாட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment