May 27, 2016

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மீதான வன்முறைச் சம்பவத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது!

கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதோடு,
தமிழர் தாயகத்தில் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை நிறுவவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட மாணவரான லுமேஸ்காந் (22 வயது) மீது, அதே பீடத்தைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் மிகவும் தாக்கப்பட்டுள்ளார்.

மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தலை முன்னின்று நடத்தியவர் என்பதோடு, இறந்த மக்களுக்கான தனது மரியாதை வணக்கத்தினை வெளிப்படுத்தும் பதிவொன்றினையும் (Facebook) முகப்புத்தகத்தில் இட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேற்குறித்த இரு விடயங்களை சுட்டிக்காட்டி, குறித்த மாணவன் மீது அதே பீடத்தினைச் சேர்ந்த சிங்கள மாணவர்களால் வன்முறை தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் என்ற ஒரே காரணத்துக்காகவே குறித்த மாணவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது ஆழ ஊன்றியுள்ள தமிழர்களுக்கு எதிரான இனவெறுப்பினையே எடுத்துக்காட்டுகின்றது.

இறந்த உறவுகளுக்கும், மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது உணர்வுசார்ந்த விடயம் மட்டுமல்ல, இது அடிப்படை மனித . இந்த அடிப்படை மனித உரிமையினைக் கூட அனுபவிக்க முடியாத நிலைமை இன்னமும் தமிழர் தாயகத்தில் நிலவுகின்றது என்பதனையே இச்சம்வம் எடுத்துக்காட்டுகின்றது.

தமிழர் தாயகத்தில் இடைவிடாது நிகழும் இத்தைகய மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும், தமிழ்மக்களுடைய பாதுகாப்புக்கும் அனைத்துலக பிரசன்னத்துடன் கூடிய பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தினை நாம் வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment