சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண பொருட்களை ஏற்றிய இரு விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் இரு விமானங்களே இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இதன்படி ஜப்பான் அரசாங்கம், போர்வைகள், தண்ணீர் தாங்கிகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், என்பனவற்றை அனுப்பி வைத்துள்ளன.
அத்துடன் இந்திய அரசாங்கம் மின் பிறப்பாக்கிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, நிவாரண பொருட்களுடன் இந்திய கப்பல்கள் இரண்டு நேற்று கொழும்பை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment