கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை முதல் கடும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இந்த மழை தொடர்ச்சியாக பெய்யும் பட்சத்தில் கொழும்பில் மேலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ளனர்.
இந்த நிலையில் மழையுடன் கூடிய வானிலை தொடரும் பட்சத்தில் களனி ஆற்றை அண்மித்துள்ள மக்கள் மேலும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
மழையுடனான வானிலை தொடரும் பட்சத்தில் களனி ஆற்றை அண்மித்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment