October 8, 2015

இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்! நியமனங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் போராட்டக்காரர்கள்!

தீர்வு கிடைக்கும் போது தான் போராட்டத்தை கைவிடுவோம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்றுடன் இரண்டாவது நாளாகவும் காலவறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் அவர்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எங்களுக்கான நியமனங்கள் தொடர்பாக அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் என அனைவரிடமும் முறையிட்டுள்ளோம்.

ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்காத காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 1400 வேலையற்ற பட்டதாரிகளையும் இணைத்து இச்செயற்பாட்டை முன்னெடுப்பதாக முடிவு செய்தோம்.

பின்வரும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே எமது போராட்டத்தினை கைவிடுவோம் என அவர்கள்  தெரிவித்தனர்.

1. அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் பரீட்சையில் சித்தி பெற்று முறைகேடாக வழங்கப்பட்ட நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு புள்ளி நிலையில் அடிப்படையில் நியமனம் வழங்கப்படல் வேண்டும்.(கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான பரீட்சை)

2. கிழக்கு மாகாணத்தில் நிலவும் 2600 பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.

3. எச்.என்.டி. ஏ. இனை பூர்த்தி செய்தவர்களுக்கும் நியமனங்கள் வழங்க்கப்பட வேண்டும்.

4. 35 வயதினை தாண்டிய பட்டதாரிகளை விரைவாக நியமனத்திற்குள் உள்வாங்க வேண்டும்.

என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தினை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment