October 8, 2015

கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா நிதியை அதிகரித்துள்ளது!

இலங்கையின் கண்ணிவெடியக்கற்றல் நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை அதிகரிப்பதாக அமரிக்கா அறிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை இன்று சந்தித்தபோது
அமரிக்க தூதுவர் அடுல் சேகப் இதனை தெரிவித்தார்.

அமைச்சின் கீழ் வரும் தேசிய கண்ணிவெடியகற்றும் குழுவுக்கும்  சர்வதேச மற்றும் உள்ளுர் பங்காளர்களின் நடவடிக்கைகளுக்கும் இலங்கை ரூபாயில் 245 மில்லியன் ரூபாய்களை வழங்குவதாக கேசப் அறிவித்தார்.

1993ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகளுக்காக அமரிக்கா  இலங்கை ரூபாயில் 6 பில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment