October 8, 2015

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்காவுக்கு தூதுவரை அனுப்புகிறது ஜப்பான்!

சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கத்தில் பங்களிப்புச் செய்வதற்காக, மோட்டூ நுகுசிஎன்றதூதுவரை,கொழும்புக்குஅனுப்பஜப்பான்தீர்மானித்துள்ளது.சிறிலங்கா பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து
 ரோக்கியோவிலவெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ஜப்பானிய பிரதமர் சின்ஷா அபே இதனைத் தெரிவித்துள்ளார்.சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கத்தில் பங்களிப்புச் செய்ய மோட்டூ நுகுசி, இந்த மாதம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதேவேளை, இவர் எத்தகைய பங்கை ஆற்றவுள்ளார் என்பது பற்றிய தகவல்கள் எதையும், ஜப்பான் அறிவிக்கவில்லை.கம்போடியாவில் கெமர்ரூஜ் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான, மோட்டூ நுகுசி, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் செயற்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.இவரை, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும், டெஸ்மன் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவின் உறுப்பினராக, கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment