October 1, 2015

வன்புணர்வினால் கொலை செய்யப்பட்ட சிறார்களுக்கு நீதியை வழங்குங்கள்: மன்னாரில் பெண்கள் அமைப்பு வேண்டுகோள்!

சிறுவர் துஸ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்ற நோக்கில், சிறுவர் மற்றும் வயோதிபர் தினம் இன்று மன்னாரில் நடைபெற்றது

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யபட்ட சிறார்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த அநீதி ஏனைய சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடக்காமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனே எடுத்து,
பெண்கள் உரிமைகளை பாதுகாக்கும்படி மன்னாரில் பெண்கள் அமைப்புகள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் அடிப்டையில் சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று மன்னார் புனித செபஸ்தியார் கோவிலில் நிகழ்வோன்று மன்னார் மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் சோதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாண கடற்றொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், அதன் உறுப்பினர் அந்தோனி பிறிமுஸ் சிராய்வா, தமிழ் அரசுகட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன், மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் பீ.ஏ. அந்தோனி மார்க், அதன் உத்தியோகஸ்தர் ஏ.சகாயம்,அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை சிறார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் உரை இடம் பெற்றது. அதன்பின் புனித செபஸ்தியார் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்று, மன்னார் மாவட்ட செயலகத்தை அடைந்து அங்கு மன்னார் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்று வழங்கப்பபட்டது.







No comments:

Post a Comment