October 9, 2015

கனடிய மண்ணில் தேர்தல் களம் சூடு!மூன்று பிரதான கட்சிகளும் பரப்புரை(படங்கள் இணைப்பு)

கனடிய மண்ணில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் மூன்று பிரதான கட்சிகளும் போட்டி போட்டு மக்களை ஈர்க்கும் பரப்புரைகளை ஆற்றி வருகின்றார்கள்.

தமிழர்கள் பல்லின சூழலில் கனடியர்களாக வாழ்ந்தாலும் இனப்படுகொலைக்கு உள்ளான வலி சுமந்து வாழும் இனம் என்ற வகையில் தம் இனத்துக்கு நீதி கேட்டு போராடும் வேட்பாளர்களை ஆதரித்து வருவதும் அதை உணர்ந்த தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்களை மகிழ்விக்க தாம் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கின்றோம் என உறுதி கூறுவதும் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த தாம் குரல் கொடுப்போம் என உறுதி அளிப்பதும் என தமிழ் மக்கள் வாசல் தேடி வந்து உறுதி மொழிகின்றார்கள்.
குறிப்பாக முன்னொரு போதும் இல்லாத வகையில் கன்சர்வேடிவ் ஆளும் கட்சி வெளிப்படையாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும் இனப்படுகொலையை கண்டிப்பதும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதும் என தமிழர் தரப்பை ஈர்த்து வருகின்றது.
தமிழர்களின் தோழனாக அன்று தொட்டே தமிழர்க்கு ஆதரவாக மறைந்த தலைவர் ஜாக் லேடன் அவர்கள் எமக்காக தன் இறுதிக் காலம் வரையில் தோளோடு தோள் கொடுத்து போராடியதையும் தமிழ் மக்கள் மறக்க தயாராக இல்லை. இந்த நிலையில் அவரின் கட்சியில் போட்டி இடும் மூன்று தமிழர்களையும் தமிழர்கள் ஆதரித்து வருவதையும் பார்க்க முடிகிறது.
ஆளும் கட்சியான கொன்செர்வேடிவ் கட்சியிலும் காவல் துறையில் பணியாற்றும் ரொசான் இம்முறை இன்னோர் தொகுதியில் வேட்பாளராக இருப்பதும் அவருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க உறுதி மொழிவதும் பார்க்க முடிகின்றது.
ஆக தமிழ் மக்களின் பார்வையில் இனத்துக்கான அரசியல் பார்வையே வலுப்பெற்று இருப்பதை கனடிய தேர்தல் கட்சிகளும் குறிப்பாக ஆளும் கட்சி நன்கு அறிந்து இருப்பதை காண முடிகின்றது.
இந்நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கனி அவர்கள் நேற்று ஒக்டோபர் 9 அன்று மாலை ஸ்கார்புரோ நகரில் உள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் ஒரு திடீர் அவசர கூட்டத்திற்கு தமிழ் மக்களை அழைத்து ஒரு முக்கிய தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வாக்குறுதியை சொல்ல போவதாக கூறியதை அடுத்து குறுகிய பொழுதில் மக்கள் அந்த மண்டபத்திற்கு கூட்டத்தில் கலந்து கொள்ள குவிந்தார்கள்.
கண்செர்வடிவ் வேட்பாளர்கள் ரொசான், மற்றும் லெஸ்லி ஆகியோரோடு கனடா கந்தசாமி ஆலய மண்டபத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஜேசன் கனி அவர்களை இளையவர்கள் வரவேற்பு நடனம் ஆடி வரவேற்றார்கள்.
வழமை போல தோழமையோடு தமிழ் மக்களோடு அளவளாவியதொடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்கும் பொறுப்பு கனடாவுக்கும் உள்ளது என்று அதை ஆளும் கட்சி மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஆதரவு குரல் எழுப்பும் அரசாக செயப்படும் என்றும் உறுதி கூறினார்.
நல்ல செய்தி என சொன்ன செய்தி:
தாம் மறுபடியும் தெரிவு செய்யப்பட்டால் யாழில் கனடிய துணைத் தூதராலயம் ஒன்று நிறுவுவோம் என்றும் அதனூடாக அங்கு வாழும் மக்களுக்கு நீதியான விசாரணை, அநீதிகளை செவி மடுக்கும் மக்கள் ஆதரவு சக்தியாக தாம் செயல்ப்படவும் மக்களுக்கு நீதி பிழைக்காமல் இருப்பதை உறுதி செய்யும் பணியில் தாமும் ஈடுபட வாய்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச விசாரணைக்கு மறுக்கப்பட்டு கலப்பு விசாரணை தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச கண்காணிப்பு பணியை கனடா இதனூடாக செய்ய விரும்புகின்றது என குறிப்பிட்டார்.
வருகை தந்த மக்கள் வேட்பாளரான தமிழ் இளைஞர் ரோசானையும் லேஸ்லியையும் வாழ்த்தினார்கள்.
அருகில் இருந்த கட்டடமான முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டு மக்களோடு அளவளாவி விட்டு விடை பெற்றார்கள் அமைச்சர் ஜேசன் அணியினர்.
தமிழர்களில் ஒருவரான ரொசான் மற்றும் தமிழர்கள் போன்ற சிறுபான்மை மக்களின் வலிகளை புரிந்து ஆதரவாக செயல்படும் மனிதம் போற்றும் வேட்பாளர்கள் கட்சிகள் கடந்து யாவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
















No comments:

Post a Comment