September 1, 2015

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு இனமான போராளி விருது!(படங்கள்இணைப்பு)

தழல் ஈகி தோழர் செங்கொடியின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் விழாவும், இனமான போராளிகளுக்கு விருது வழங்கும் விழாவும் நேற்று திங்கட்கிழமை சென்னையில் சிறப்புற இடம்பெற்றது.

தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் ஆரம்பமான நிகழ்வில் உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.
நிகழ்வில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இனமான போராளிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
இதன்போது இலங்கையிலிருந்து சென்று நிகழ்வில் பங்கேற்ற வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு இனமான போராளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Download (1)
Download (2)
Download (3)
Download (4)
Download (5)
Download (6)
Download

No comments:

Post a Comment