September 1, 2015

யாழில் மாணவரின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய அதிபரின் தம்பி (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி மாணவர்களின் அதிபர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்களால் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றது.

இதன் போது புதிதாக இடமாற்றம் பெற்று வந்த அதிபரின் சகோதரரால் இன்று பெற்றோர் ஒருவர் தாக்கப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தம்பையா கதிர்காமதம்பி என்பவரே அதிபரின் சகோதரர் மகாலிங்கம் கோபாலவண்ணன் என்பவரால் பொலிசார் முன்னிலையில் தாக்கப்பட்டார்.
இவரை தாக்கிய நபர் பாடசாலை அதிபரின் காரியாலயத்தில் இருந்தே வந்து தாக்கியுள்ளார்.
இந்நபர் தாக்கப்பட்ட சமயம் கல்லூரி அதிபருடன் வலயகல்விப் பணிப்பாளர் சந்திரராஜா அவர்களும் அலுவலகத்தில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
IMG_7176
p2
p6
p7

No comments:

Post a Comment