September 1, 2015

சிறப்பாக நடைபெற்ற வன்னிநேய அமைப்பின் இலவச கணணி கற்கை நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு(படங்கள், வீடியோ இணைப்பு)

வன்னி நேய அமைப்பு முல்லைத்தீவு முள்ளியவளையில் நிறுவியுள்ள குளோறியஸ் கணிணி பயிற்சி நிலையத்தில் இலவச கற்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 30 நாள் நடைபெற்றுள்ளது.
வன்னி மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் சிவனருள் இல்லத்தின் அனுசரணையுடன் வன்னி நேய அமைப்பு முல்லைத்தீவு முள்ளியவளையில் நிறுவியுள்ள குளோறியஸ் கணிணி பயிற்சி நிலையத்தில் இலவச கற்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்  இந்த நிகழ்விற்கு அதன் இயக்குனர் யோகேஸ்வரன் வினோஜன் தலைமை தாங்கினார்.
/P>
முள்ளியவளை பிரதேசத்தில் இந்த இலவச கணணி கற்கை நெறி நிலையம் அமைந்திருப்பதனால் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment