September 3, 2015

முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் வாகன விபத்து: மூவர் படுகாயம் (படங்கள் இணைப்பு)

விபத்தொன்றில் சிக்கி முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது

சாவகச்சேரியில் இருந்து வீட்டிற்கு நிலையம் எடுப்பதற்காக அழைத்துச் சென்ற நபரை மீளவும் கொண்டு சென்று விடுவதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் முன் சில்லு காற்றுப்போன நிலையில் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது.
இதில் மூவர் காயங்குள்ளானதாக தெரியவருகின்றது.விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment