September 30, 2015

ஐ.நா உள்ள சில குறைபாடுகள் முழு செயற்பாட்டையும் பாதிக்கும் - ஐயத்துடன் சி.வி. விக்னேஸ்வரன்(படங்கள் இணைப்பு)

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை நான் முழுமனதுடன் வரவேற்கின்றேன் என வட மாகாண சபை முதலமைச்சர் ச.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புதிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையானது புதிய செயன்முறையின் ஆரம்பமாகவும் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான புதிய படிமுறையாக இருப்பதுடன் இலங்கiயில் பலக்காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டி பாதிப்புற்ற மக்களிற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வழிக்கோலுமென நம்புகின்றேன். 

இதுவே இலங்கை வாழ் அனைத்து சமூகங்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

நான் வட மாகாணத்தின் முதலமைச்சராக மட்டுமின்றி ஓய்வுபெற்ற உயர் நீதி மன்ற நீதியரசர் என்ற வகையிலும் பல்வேறுபட்ட சந்தர்பங்களில் மனித உரிமைகள் மீறல்களிற்கு உட்பட்டுள்ளேன். 

இவ் வரைபில் காணப்படுகின்ற ஒரு சில குறைபாடுகள் இம்முழு செயற்பாட்டினையும் பாதிப்படையச்செய்யுமே என்னும் அச்சம் என்னுள் நிலவுகின்றது.

எது எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்நாட்டு பொறிமுறையின்றி கலப்பு நீதிமன்ற முறை தொடர்பாக தெளிவான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளமையினால் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஏனைய ஏமாற்று வித்தைகளிற்கு இடமிருக்காது என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களிற்கு உரிய நியாயம் கிட்டுவதுடன் அது உயர் நீதிமன்றின் பொறிமுறைக்கு உட்பட்டதாகவே அமைகின்றது.  

இந் நீதிமன்றில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் பங்குப்பற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


No comments:

Post a Comment