வத்தளை பிரதேசத்தில் நேற்று கைப்பற்றப்பட்ட சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கை கடத்தி வரப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் தப்பிச் சென்று வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வரும் பிரபல பாதாள உலக தலைவரான கிம்புலாஹெல குணா என்பவரின் மைத்துனர் சுரேஷ் என்ற நபரின் ஊடாக இந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருளுடன் 5 பேர் வத்தளையில் நேற்று கைது செய்யப்பட்டனர், இவர்களில் இரண்டு பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment