September 26, 2015

சாட்சியங்கள் இல்லாமல் மனட்சாட்சிக்கு மாறான கொலைகள் அரங்கேறின - நிர்மலநாதன் !

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சு தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றும் பிரேரணையின்போது உரை நிகழ்துகையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய நிலைமை தற்போதைய அரசாங்கம் பெற்றுத்தருமா? எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது இடம்பெற்றவைபோன்று நீதி மறைக்கப்பட்ட நிலைமை ஏற்படுத்திக்கொடுக்கப்படுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.இறுதி யுத்தத்தின்போது சாட்சியங்கள் இனிறியும் மனட்சாட்சிக்கு மாறாகவும் பல கொலைகள் இடம்பெற்றன இவற்றை மறைக்க முடியாது என தெரிவித்த அவர், இதற்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டுமென குறிப்பிட்டார்.
தமிழர் தம்மைத் தாமே ஆழக்கூடிய சுயநிர்ணய உரிமையை கோரி வருகின்றனர் எனினும் தொடா்ச்சியாக இலங்கை அரசால் ஏமாற்றப்பட்டு வருவது கவலை தருவதாகவும் அவர் தனது நாடாளுமன்ற கன்னியுரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment